×

இருதரப்பு மோதலில் வாலிபர் அதிரடி கைது

கெங்கவல்லி, நவ. 19: தலைவாசல் அருகே ஊனத்தூரில் இருந்து சிறுவாச்சூர்-தலைவாசல் வழியாக ஆத்தூர் செல்லும் தனியார் பஸ்சில், கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி செல்லும் போது, ஊனத்தூரை சேர்ந்த சக்திவேல் தரப்புக்கும், சிறுவாச்சூரை சேர்ந்த ஐயப்பன் தரப்புக்கும் பஸ்சில் படியில் ஏறுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்தவர் விலக்கி விட்ட நிலையில், இருவருர் குடும்பத்தினரிடைய மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இருதரப்பிலும் 6 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சக்திவேல் கொடுத்த புகாரிலும், ஐயப்பன் கொடுத்த புகாரிலும் தலா 10 பேர் வீதம் 20 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கௌதம்(19) என்பவரை, தலைவாசல் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : Kengavalli ,Unathur ,Thalaivasal ,Athur ,Siruvachur-Thalaivasal ,Sakthivel ,Ayyappan ,Siruvachur ,
× RELATED டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது