மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு ஜெயங்கொண்டம் அருகே வல்லத்தில் குடமுழுக்கு வேண்டி சிவன் கோயிலில் தமிழில் யாகம்

ஜெயங்கொண்டம், ஜன.7: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வல்லம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் காசி விஸ்வநாதர் கோவில் பராமரிப்பு இன்றி இருந்தது. இதனால் ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்காக தொடர்ந்து கடந்த 48 நாள் ஒரு மண்டலமாக கோவிலில் விளக்கு போட்டு தினசரி பூஜையை தொடர்ந்து வந்தனர். நேற்று காலை 9 மனியளவில் ஒரு மண்டலம் 48 நாள் நிறைவை முன்னிட்டு அனைக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிவனடியார்களை வரவழைத்து தமிழ் முறைப்படி யாகம் வளர்த்தனர். வேள்வியின் போது வல்லம், தேவனூர், குவாகம், அய்யூர், காங்குழி, இடையக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>