×

தலைஞாயிறு ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணி

 

வேதாரண்யம், நவ.18: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை நாகை மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் வாக்காளர் தீவிர திருத்த முகாமில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு பாக நிலைய முகவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், மாவட்ட பிரதிநிதி மச்சழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் செல்வா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பாக நிலைய முகவர்கள், ஆத்மநாதன், மணிகண்டன், சதீஷ்குமார், ஞானஒளி, சுப்பராயலு உட்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Vetaranyam ,Nagapattinam District Council ,Tamil Nadu Fisheries Association ,Chairman Gautaman ,Special Extreme Amendment Camp ,Special Radical Amendment Union ,Nagapattinam district ,Vedaranyam Taluga Thalanayiyu Union ,Vedaranyam Block ,Thalanayiru Union ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...