×

கட்டிடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு சென்னை, அண்ணா நகரில் ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குமுறை படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், மனை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனையை வெளிப்படையான முறையில் உறுதி செய்வதற்கும், கட்டிட மனை விற்பனை துறையில் நுகர்வோர்களின் நலனை பாதுகாப்பதற்கும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்வு காண்பதற்கும் தமிழ்நாடு கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சென்னை அண்ணா நகர் பகுதியில் 19,008 சதுர அடி இடத்தில் ரூ.77.60 கோடி செலவில் 56,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டிடம் இக்குழுமத்தால் வாங்கப்பட்டது. மேலும், ரூ.19.49 கோடி செலவில் இக்கட்டிடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Building and Land Sales Regulatory Group ,Appeals Tribunal ,Ph. K. Stalin ,Chennai ,Department of Housing and Urban Development ,Anna Nagar, Chennai ,K. Stalin ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...