×

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம். தடம் மாறாத பயணம், தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள். நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்தி வரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...