×

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மேட்டூர், நவ. 18: மேட்டூர் அருகே கருமலைக்கூடல் சக்தி தியேட்டர் பின்புறம் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி சாவித்திரி (64). இவர்கள் கடந்த 6ம் தேதி, சென்னையில் உள்ள மகன் யுவராஜ் வீட்டிற்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, யுவராஜ் கருமலைக்கூடலில் உள்ள வீட்டிற்கு வந்து சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள், கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்த போது, சாவித்திரி வீட்டில் 2 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து ெசன்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mettur ,Krishnaraj ,Karumalakoodal Shakti Theater ,Savitri ,Yuvaraj ,Chennai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...