×

ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள்: டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீ நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறியதாவது : வேளாண்மை – கிராமப்புற மேம்பாடு, கலை – கலாச்சாரம், கல்வி – சுகாதாரம், தொழில்முனைவு – தொழில், சுற்றுச்சூழல்- நிலைத்தன்மை, ஊடகம் – தொடர்பு, பொது சேவை – நிர்வாகம், மற்றும் சமூக நலன் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு விருதும் ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும்.

www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் சேவை, பணி பகுதி மற்றும் துணை ஆவணங்களின் விவரங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளும், விருதுகளின் தாக்கம், நேர்மை மற்றும் அவற்றின் நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான குறும்பட்டியல் குழுவால் கவனமாக மதிப்பீடு செய்யப்படும்.

பின்னர் இறுதித் தேர்வுக்காக நடுவர் மன்றத்தின் முன் பட்டியலிடப்படும். இந்த விருது வழங்கும் விழா அடுத்தாண்டு பிப்.1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெறுபவர்களின் விவரங்கள் www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த சந்திப்பின் போது, அஜித் சோர்டியா, விருதுகள் தலைவர் தினேஷ் கோத்தாரி, பொதுச்செயலாளர் அனில் கிச்சா, ஒருங்கிணைப்பாளர் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajasthani Tamil Seva Awards ,Chennai ,Rajasthani Association ,Tamil ,Nadu ,President ,Shri Narendra Srisreemaal ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு