×

சிமேட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை: ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (நவம்பர் 17) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை மறுநாள் (நவம்பர் 18) கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களில் நவம்பர் 20, 21ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் .

Tags : Chennai ,Union Higher Education Institutions ,All India Council for Technical Education ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...