×

(தி.மலை) பழங்குடி பெண்களுக்கு தையல் பயிற்சி

தண்டராம்பட்டு, ஜன.6: தண்டராம்பட்டு அடுத்த ஆத்திப்பாடி ஊராட்சி பீமாரப்பட்டி கிராமத்தில் நேற்று, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பழங்குடியின பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி நடந்தது. திட்ட இணை இயக்குனர் சந்திரா, பிடிஓ சம்பத், ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார மேலாளர் (மகளிர் திட்டம்) ராஜேந்திரன் வரவேற்றார். இதில் உதவி அலுவலர் பாரதி முன்னிலையில், 3 பிரிவுகளாக 120 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் உதவி அலுவலர் சாமுண்டீஸ்வரி கூறினார்.

Tags : T.Malai ,women ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்