×

18ம்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது தத்தனூர், மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 18ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண் மற்றும் மற்றும் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை அரியலூர் மாவட்ட வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur ,Meenakshi Ramasamy Engineering College ,Thattanur… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...