×

குழந்தைகள் தின விழா

சிவகங்கை, நவ. 15: சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடினர்.தலைமை ஆசிரியை மரிய செல்வி வரவேற்புரையாற்றினார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்து தங்கள் வீடுகளில் மரக்கன்றுகள் வளர்த்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பின்னர் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வீரதீர செயல்கள் புரிந்தவர்களை பற்றிய, கவிதை கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிலம்பம் ஆசிரியர் புவனேஸ்வரன் மற்றும் மாணவர்கள் சிலம்பம் நிகழ்த்தினார். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவி அமல் ரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளைஆசிரியர்கள் சுந்தரி, மைக்கேல், சரவணன், ஜெகன், லதா, ராஜலட்சுமி, லஷ்மி, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை பிரபா நன்றி கூறினார்.

 

Tags : Children's Day ,Sivaganga ,Day ,Sivaganga Municipal Middle School ,Principal ,Maria Selvi ,Municipal Chairman ,Durai Anand ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...