×

சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கவுரவிப்பு

 

சென்னை: பெண்கள் உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வெலம்மாள் நெக்ஸஸ் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் ராம் வேல்மோகன், இயக்குனர் ஷிவானி வேல்மோகன் முன்னிலை வகித்தனர்.

இதில், தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பேசியதாவது;ஹர்மன் ப்ரீத் கௌர் போன்ற உலகத் தரச் சாம்பியனை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் தங்களையும் அர்ப்பணிப்பணித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இந்த விழாவில், ஹர்மன் ப்ரீத் கௌர் மாணவர்களிடம், உழைப்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை ஆகியவை வெற்றியின் குரல் என்பதை உணர்த்தும் வகையில் ஊக்கமளிக்கும் உரையினை வழங்கினார்.

அப்போது தங்கப்பதக்கம் வென்ற செஸ் சாம்பியன் சர்வாணிகாவிற்கு ரூ.5லட்சம், ஆசியன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை முதன்முதலாக வென்ற பேட்மின்டன் வீராங்கனை தீக்ஷா சுதாகருக்கு ரூ.3 லட்சம் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த 110 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவி தொகைக்கான காசோலைகளையும் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வழங்கினார். இதையடுத்து அடையாளம்பட்டில் 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் பல்நோக்கு சர்வதேச தர வேலம்மாள் வித்யாலயா விளையாட்டு அரங்க வளாகத்துக்கு பூமி பூஜை நடைபெற்றது.

Tags : Harman Preet Kaur ,Chennai Velammal Nexus ,Chennai ,Harman Preet Gaur ,Indian women's cricket team ,Women's World Cup ,Velammal Nexus ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...