×

தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும்.

2025-26ம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் “fellowship.tntwd.org.in” உருவாக்கப்பட்டுள்ளது. 12.12.2025 நாள்வரை விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Department of Adi Dravidar and ,Tribal Welfare ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...