×

தாய், மகளை மாடியில் அடைத்து வைத்து 4 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மதுரையில் துணிகரம்

மதுரை, ஜன. 5: மதுரையில் செல்போன் ேஷாரூம் அதிபரின் மனைவியை குழந்ைதயுடன், மொட்டை மாடியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிலிருந்த வெள்ளி, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயில் அருகேயுள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் துளாராம். செல்போன் விற்பனை ஷோரூம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டுக்கு வந்த துளாராம் சாப்பிட்டு விட்டு ேஷாரூம் சென்றுவிட்டார். வீட்டிலிருந்த இவரது மனைவி செண்பகவள்ளி, துணிகளை காய பாடுவதற்காக, தனது 5 வயது குழந்தையை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, இவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், மொட்டை மாடி கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பீரோவிலிருந்த நான்கரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கால் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். சிறிதுநேரத்தி
ல் துணிகளை காயப்போட்ட பின், மாடியிலிருந்து இறங்க முயன்ற செண்பகவள்ளி கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உதவிகேட்டு சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் வந்து கதவை திறந்துள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்த போதுதான் வெள்ளி, தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து துளாராம் கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பார்ட்மெண்ட் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியிலுள்ள அப்பார்ட்மெண்டில் குழந்தையுடன் தாயை மாடியில் அடைத்து வைத்து நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை