×

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் காதலர்களான 10ம் வகுப்பு மாணவியும், பிளஸ்-2 மாணவனும் வீட்டுக்கு தெரியாமல் சென்னை சென்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது, பிரம்ம தேசம் காவல்நிலைய போலீஸ்காரர் இளங்கோ, வழிமறித்து விசாரணை நடத்தினார். பின்னர் மாணவனை அனுப்பிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவரிடமிருந்து தப்பிய மாணவி, மீண்டும் மாணவனுடன் பைக்கில் சென்று பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர்களின் புகாரின்படி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து போலீஸ்காரர் இளங்கோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ்காரர் இளங்கோவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. சரவணன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Boxo ,Viluppuram ,Kottakupam ,Chennai ,Brahma Desam ,Police Officer ,Ilango ,
× RELATED கும்பகோணத்தில் மாணவர்கள் தாக்கியதில்...