×

அம்பையில் அமமுக ஆலோசனை கூட்டம்

அம்பை, ஜன. 4: அம்பையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். இளைஞர் பாசறை மாநில துணைச்செயலாளர் குமரேசசீனிவாசன், பாசறை மாவட்டச் செயலாளர் ஆசீர், ஜெ. பேரவை  மாவட்ட இணைச் செயலாளர் ராஜா முகைதீன், ஒன்றியச் செயலாளர்கள் கயத்தாறு மேற்கு  கணபதி பாண்டியன், அம்பை  பாலையா, சேரை தெய்வநாயகம், பாப்பாக்குடி தங்கராஜ், அம்பை ஒன்றிய இணைச் செயலாளர் சுப்பிரமணியன், அம்பை ஒன்றிய அவைத்தலைவர் முத்துசாமி என்ற கண்ணன், நகரச் செயலாளர்கள் அம்பை இசக்கிமுத்து பாண்டியன், விகேபுரம் ஸ்டாலின், பேரூர் செயலாளர்கள் மணிமுத்தாறு சுப்பிரமணியன், கல்லிடை அசன், சேரை கணேசன், பத்தமடை ஷேக் செய்யது அலி, வீரை மந்திரமூர்த்தி , மேலச்செவல் மாடசாமி, கோபாலசமுத்திரம் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : meeting ,Ambai ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...