சென்னை: வன்முறையை தூண்டும் விதமாக த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து தொடர்பான வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ‘ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. நள்ளிரவு போடப்பட்ட பதிவு என்பதால் பெரும்பாலானோர் பார்க்க வாய்ப்பு இல்லை’ என வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
