×

தமிழ்நாட்டில் கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு இனி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு இனி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

விதிகளில் திருத்தம்:

தமிழ்நாடு குடிமைப் பணிகள் (கருணை அடிப்படையிலான பணி நியமனம்) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல் கருணை அடிப்படையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, ‘ஆன்லைன்’ (Online) வழிமுறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.

புதிய வலைதளம் துவக்கம்:

அரசு பணியின்போது உயிரிழக்கும், அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணைப் பணி கோரி விண்ணப்பிப்பதற்காக, தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். இத்தகைய அரசாணையின்படி, விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டிய புதிய வலைதள முகவரி (www.tncgpa.tn.gov.in) செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புதிய வலைதளம் கடந்த அக்டோபர் 31ம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமனம் கோருபவர்கள் இந்த புதிய வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டது.

 

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...