×

செந்துறை அருகே குழுமூரில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்ப விளக்கம்

அரியலூர்,ஜன4 : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள குழுமூரில் அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை பரப்புவது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு குழுமூர் ஊராட்சி தலைவி புதுமலர்பூபதி தலைமையேற்று நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். செந்துறை வேளாண்மை உதவி இயக்குனர் ஜென்சி முன்னிலை வகித்தார்.அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பழனிசாமி வரவேற்று பேசுகையில், கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகள் மத்தியில் சொல்லக்கூடிய தொழில்நுட்பங்கள் எளிதில் சென்றடைந்து மனதில் நன்கு பதியும் என்றார்.

இதனையடுத்து ஓசை கலைக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய கலைநிகழ்ச்சிகளில் பயிர்காப்பீட்டு திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டு பண்ணையம், மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடைஉழவு செய்வதன் அவசியம் பற்றியும் கரகாட்டம், மயிலாட்டம், குச்சிப்புடி ஆட்டம் கொண்டு விவசாயிகள் மனதில் பதியும்படி எடுத்துரைத்தனர்.நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல் பெருமாண்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

Tags : art performances ,Sendhurai ,Kulhumur ,
× RELATED கொள்ளையர்கள் என பொதுமக்கள் முற்றுகை...