×

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தார். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜெயராம் நகர் நிலையம் அருகே, மாலை 4 மணியளவில் கேவ்ரா சாலை – பிலாஸ்பூர் மெமு உள்ளூர் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். சரக்கு ரயில் மீது மோதிய அதன் பெட்டிகள் மீது பயணிகள் ரயில் ஏறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியது. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. ரயில்வே, பயணிகளின் உறவினர்களுக்கு உதவும் பொருட்டு உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

உதவி எண்கள்:
ஜாம்பா சந்திப்பு (Champa Junction) : 808595652
ராய்கர் (Raigarh) : 975248560
பெண்ட்ரா சாலை (Pendra Road) : 8294730162

Tags : Chhattisgarh state Bilaspur ,Raipur ,Chhattisgarh state ,Bilaspur ,Jayaram Nagar station ,Bilaspur district ,Chhattisgarh ,
× RELATED தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம்...