சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, காசியாபாத் செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் மற்றும் விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
