×

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெற்ற மனுக்கள்: கலெக்டர் ஆய்வு தகுதியான மனுக்கள் மீது திருத்தம் செய்ய நடவடிக்கை

பெரம்பலூர்,ஜன.1:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றபோது பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆ லத்தூர் தாலுகா, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் கிராமங்களில் நேற்று கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களின் போது பெறப்பட்ட படிவங்களின் தன்மை குறித்து வீடு வீடாக சென்று விசாரணை செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி, ஜனவரி 1ம்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அ னைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திரு த்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப் பங்களை பெற்றிட சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெயர் சேர்த்தல் தொடர்பாக, பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக, ஒரே சட்டமன்ற தொகுதியில் வேறு வாக்குசாவடி மையத்திற்கு மாறுதல் தொடர்பாக என மொத்தம் 14,747 விண்ண ப்பங்கள் பெறப்பட்டுள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 13,458 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 28,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள்மீது சம்மந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் கள ஆ ய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக் கை மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஆலத்தூர் தா சில்தார் பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.

Tags : Petitions ,summary correction camps ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...