×

சிட்டி யூனியன் வங்கி மொத்த வர்த்தகம் ரூ.12,7047 கோடி நிகர மதிப்பு ரூ.9,838 கோடி லாபம் 329 கோடி ரூபாய்: நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல்

சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.12,7047 கோடியாகும். மேலும் நிகர மதிப்பு ரூ.9838 கோடி, நிகர லாபம் ரூ.329 கோடி என்று வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி கூறினார். கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2025-26ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளையும், வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் வங்கியின் நிர்வாக இயக்குனர், முதன்மை செயல்அதிகாரி காமகோடி நேற்று சென்னையில் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குனர், முதன்மை செயல்அதிகாரி காமகோடி கூறியதாவது: வங்கியின் மொத்த வியாபாரம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 20 சதவீதம் உயர்ந்து ரூ.12,7047 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை 21 சதவீதம் உயர்ந்து ரூ.69486 கோடியாகவும் மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் உயர்ந்து ரூ.57,561 கோடியாகவும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.3761 கோடியாகவும், அதில் இதர வருமானம் ரூ.503 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வங்கியின் மொத்த லாபம் ரூ.471 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து ரூ.329 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.667 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 0.90 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.59 சதவீதமாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த அரையாண்டில் இருந்த மதிப்பான ரூ.8838 கோடியில் இருந்து ரூ.9838 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 889 கிளைகள் மற்றும் 1,709 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நிர்வாக இயக்குனர், முதன்மை செயல் அதிகாரி காமகோடி கூறினார்.

Tags : City Union Bank ,Managing Director ,Kamakoti ,Chennai ,Managing ,Chief Executive Officer ,Kumbakonam ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...