- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமீம் அன்சாரி (எ) தமிழரசு
- வசந்த
- பொன்னியம்மன் கோயில் தெரு
- அயனம்பாக்கம்
- மகாத்மா காந்தி நகர்
- பூவ்ரிந்தவல்லி தாலுகா
- திருவள்ளூர் மாவட்டம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம் அயனம்பாக்கம் மகாத்மா காந்தி நகர் பொன்னியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகள் ரியாஸ் (வயது 5) மற்றும் ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
