புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கானது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பாலேஷ் குமார் மற்றும் ராஜேஷ் மல்ஹோத்ரா அமர்வில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்க மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, சொத்துக்களைஅமலாக்கத்துறை முடக்கி வைத்ததையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
