×

5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழக போலீஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: மாநில குற்ற ஆவணக்காப்பக ஐஜி ஜெய, ஊர்க்காவல்படை ஐஜியாகவும், தொழில் நுட்பப் பிரிவு ஐஜியாக இருந்த ஆவினாஸ்குமார், மாநில குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக இருந்த முத்தரசி, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்புத்துறை எஸ்பியாகவும், ஆவடி போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இருந்த சங்கு, ஆவடி ஆணையரகத்தில் உள்ள செங்குன்றம் துணை கமிஷனராகவும், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி போலீஸ் பயிற்சிக் கல்லூரி எஸ்பியாக உள்ள முத்தரசி, சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Home ,Chennai ,Tamil Nadu ,Home Secretary ,Dheeraj Kumar ,State Crime Records ,IG Jaya ,Home Guard IG ,Technical Wing ,IG ,Avinash Kumar ,State Crime… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...