×

டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை லென்சுக்கு முன் டீ: இந்திய-தெ.ஆப்ரிக்கா போட்டியில் அறிமுகம்

கவுகாத்தி: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையே 2வது டெஸ்ட் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நவ.22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது மதிய உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் செஷன் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்க காலை 11 மணிக்கு முடிவடையும். பின்னர், 20 நிமிட தேநீர் இடைவேளை. 2வது செஷன் காலை 11.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.20 மணி வரை நடைபெறும். பின்னர், மதிய உணவு இடைவேளை. இதன்பின் தொடங்கும் செஷன் இறுதி செஷன் ஆகும். மதியம் 2 மணிக்கு தொடங்கும் 3வது செஷன் மாலை 4 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுத்தாத்தியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : India ,South Africa ,Guwahati ,South ,Africa ,Guwahati, Assam ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...