×

திருவழுதிநாடார்விளையில் பனைவிதை மரக்கன்று நடும் விழா

ஏரல்,அக்.31:ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியான திருவழுதிநாடார்விளையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், 300 பனை விதைகளை ஊன்றியும், மரக்கன்றுகளும் நடவு செய்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் மணிவண்ணன், பேரூராட்சி பணியாளர்கள் அழகு, ஜாண்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : seed and ,planting ,Thiruvazhutinadarvilai ,Eral ,Green Tamil Nadu Movement ,Sharmiladevi Manivannan ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது