×

மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

தர்மபுரி, அக்.41: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாளாப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் ரம்யா(19). இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி. டிப்ளமோ முடித்து, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே நிறுவனத்தில் சம்பளம் குறைவாக தருவதால், அவரது பெற்றோர், ரம்யாவிடம் வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருக்கும்படி கூறியுள்ளனர். இதனால், மனவேதனையடைந்த ரம்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Vediyappan ,Palakkad Thalapallam ,Dharmapuri district ,Ramya ,Hosur ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...