×

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

பெரம்பலூர்,டிச.31: பெரம்பலூரில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை எம் எம்ஏக்கள் முன்னிலையில் கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் பெரம்பலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 1,188 மாணவர்கள், வேப்பூர் கல்வி மாவட்டத் தைச்சேர்ந்த 971மாணவர்கள் என மொத்தம் 2,159 மாணவர்களுக்கும் பெரம்ப லூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 1,353 மாணவிகள், வேப்பூர் கல்வி மாவட்டத் தைச்சேர்ந்த 1,120 மாணவிகள் எனமொத்தம் 2,473 மாணவிகளுக்கும் என பெரம் பலூர் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 4,632மாணவ, மாணவி களுக்கு விலையில்லாசைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், குன்னம் எம்எல்ஏஆர். டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா கலந்துகொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி னார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணாகோபால், மாவட்டக் கல்வி அலுவலர்கள் குழந்தைராசன், மாரி மீனாள் மற்றும் தலைமை யாசிரியர்கள், அரசுஅலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : government school students ,Perambalur ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்