×

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..!!

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.முதலாவதாக கோயம்பேடு -ஆலந்தூர் இடையே மெட்ரோ சேவை தொடங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் -விம்கோநகர் , சென்ட்ரல் -பரங்கிமலை வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டது.மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 10 ஆண்டுகளில், கடந்த ஏப்ரல் வரை 39 கோடி முறை மக்கள் பயணம் செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் மெட்ரோ ரயில் சேவையை பெறும் வசதியாக, இலவச சைக்கிள், வாடகை பைக், ஆட்டோ, இ-சைக்கிள் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 220 ஏசி மினி பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியது. 11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 6 மீட்டர் நீளம் கொண்ட புதிய மினி ஏசி மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய ஏசி மின்சார பேருந்து சேவையால் கூட்ட நெரிசல் குறையும், பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Transport Corporation ,Chennai ,Chief Minister ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்