×

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம்

 

அரியலூர், அக். 29: அரியலூரில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பதிவுகளை புதுப்பித்தல் குறித்து விவாதித்தல். மனநலம் தொடர்பான பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல். மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல். பாலினம் தொடர்பான பயிற்சி வழங்குதல் குறித்து விவாதித்தல்.

Tags : Local Government Day Gram Sabha ,Ariyalur district ,Ariyalur ,Gram Sabha ,Local Government Day ,District ,Collector ,Rathinasamy ,Ariyalur district… ,
× RELATED மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை...