- கலைநயம் மிக்க
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்...
பெரம்பலூர், டிச.12: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அதிநவீன ஒருங்கிணைந்த விரிவுரை கூடம்திறப்பு விழா நடைபெற்றது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட அதிநவீன ஒருங்கிணைந்த விரிவுரை கூடம் 11ம் தேதி (நேற்று) பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை தாங்கி, புதிய விரிவுரை கூடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்குப் அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் உரையில் கூறியதாவது:”கல்வி என்பது ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய சக்தி அந்த சக்தியை தரமான முறையில் வழங்குவது எல்லா கல்வி நிறுவனத்திற்கும் மிகப் பெரிய பொறுப்பு. இன்று நாம் திறந்து வைக்கும் இந்த அதிநவீன ஒருங்கிணைந்த விரிவுரை கூடம் மாணவர்கள் உலகத் தரத்தில் கற்க வேண்டிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்பது புத்தக அறிவால் மட்டுமல்ல, நடைமுறை புரிதல், தொழில்நுட்ப திறன் மற்றும் ஒருங்கிணைந்த கற்றல் முறையால் உருவாகும். இங்கே நிறுவப்பட்ட நவீன வசதிகள்- உயர்தர ஒலி, ஒளி அமைப்பு, பல திரை விளக்கக்காட்சி வசதி, திறன் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் ஆகியவை- மாணவர்களின் கற்றல் தரத்தை பல மடங்கு உயர்த்தும்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் கல்வி பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவரும், மருத்துவத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக உருவாக வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காகவே இப்படிப்பட்ட முன்னேற்றமான கட்டமைப்புகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறோம். இந்த விரிவுரை கூடம் மாணவர்களின் அறிவை விரிவாக்குவதுடன், ஆசிரியர்களுக்கும் மேம்பட்ட கற்பித்தல் சூழலை வழங்கும். என்று கூறினார்.
முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் டீன் விஸ்வநாதன் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசீலன் நன்றி கூறினார். இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார் மருத்துவ மாணவர்கள் பெற்றோர்கள், மற்றும் பேராசிரியர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
