- கிளட்ச் செஸ்
- குகேஷ்
- நகமுரா
- மிச ou ரி
- கிளட்ச் செஸ் சாம்பியன்கள்
- மிசோரி, அமெரிக்கா
- மேக்னஸ் கார்ல்சன்
- நார்வே
- இந்தியா
மிசோரி: கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் மிசோரி நகரில் துவங்கின. நேற்று நடந்த முதல் போட்டியில், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார். 2வது போட்டி டிரா ஆனது. அதன் பின், அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுடன் ஆடிய குகேஷ், முதல் போட்டியில் வெற்றி பெற்றார். பின், 2வது போட்டியில் டிரா செய்தார். பின்னர், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவுடன் 2 போட்டிகளில் மோதிய குகேஷ், இரண்டிலும் வென்றார்.
நேற்றைய முடிவில், 4 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடம் பிடித்தார். குகேஷிடம் நேற்றைய போட்டியில் தோற்ற நகமுரா, சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் குகேஷை தோற்கடித்த பின், அவரது ராஜாவை தூக்கியெறிந்தது, பெரியளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்கு மாறாக, நகமுராவை நேற்று வென்ற குகேஷ், அதை பெரிதுபடுத்தாமல், செஸ் போர்டில் காய்களை அடுக்கி வைத்து விட்டு அங்கிருந்து அமைதியாக நகர்ந்தது, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
