×

அப்போ சேர்த்தாங்க… இப்போ நீக்குறாங்க… ஒன்றிய அரசின் அடிமையாக மாறிய தேர்தல் ஆணையம்: சண்முகம் பாய்ச்சல்

திருப்பூர்: இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் அடிமையாக மாறி உள்ளது என சண்முகம் பேசினார். திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுகூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: முன்பு எல்லாம் வாக்காளர்களை இணைப்பதற்காக செயல்பட்ட தேர்தல் ஆணையம், தற்போது வாக்காளர்களை நீக்குவதற்காக செயல்படுகிறது. பாஜவிற்கு யாரெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அவர்களின் வாக்குகளை திட்டமிட்டு தேர்தல் ஆணையம் பறிக்கிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உடனடியாக எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் திருத்தம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் திருத்தத்தை செய்ய நிர்ணயித்துள்ளார்கள். வாக்காளர் என்று நிரூபிக்க வேண்டியது மக்களின் கடமை என அவர்கள் கூறுகிறார்கள். இனி நடக்கக்கூடிய தேர்தல்களில் மக்கள் வாக்களிக்க முடியுமா? என்று பிப்ரவரி 4ம் தேதி தான் தெரியும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்த தேர்தல் ஆணையம், தற்போது ஒன்றிய அரசின் அடிமை ஆணையமாக மாறி உள்ளது. பாஜவின் கைப்பாவையாக செயல்படுகிறது. முடிவு செய்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Commission ,Union Government ,Shanmugam Payachal ,Tiruppur ,Shanmugam ,Election Commission of India ,Marxist ,Communist ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...