×

அமைச்சர் தலைமையில் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆய்வுக் கூட்டம்

சென்னை: பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், வழக்கமாக 2026 ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2025 டிசம்பர் மாதம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என்று பயிர் காப்பீட்டு நிறுவனங்களை அமைச்சர் அறிவுறுத்தினார். 27 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள்ளும், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள்ளும் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஜெயா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள் மற்றும் டெல்டா மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் (காணொலியில்) கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Welfare ,Minister ,M.R.K. Panneerselvam ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...