×

2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த பளு தூக்கும் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

 

சென்னை: 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த பளு தூக்கும் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பளு தூக்குதல் பிரிவில் 2 வெள்ளி பதக்கம் வென்று மகாராஜன் சாதனைபடைத்துள்ளார். கலைஞர் சிலை திறக்க கோவில்பட்டி வந்த நிலையில் இந்த செய்தியை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும். மகாராஜனின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் பயிற்சிக்கும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Maharajan Arumugapandian ,Chennai ,Maharajan ,Asian Youth Games.… ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...