×

பிடிஓ அலுவலகம் முன் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.31:வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் தினேஷ்பாண்டியன், முன்னாள் துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags : Demonstrators ,BDO ,office ,
× RELATED 377 தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன்