×

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தாயகம் கவி தாயார் சௌந்தரி அம்மையார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தாயகம் கவி தாயார் சௌந்தரி அம்மையார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திரு. வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தி.மு.கழகத் துணை அமைப்புச் செயலாளருமான தாயகம் கவி தாயார் ப. சௌந்தரி அம்மையார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

கழகத்தின் கருப்பு சிவப்பு உணர்வுள்ள உறுதியான பெண்மணியாக விளங்கிய அவர், 97 வயதிலும் முரசொலியை நாள்தோறும் படித்து வந்தார் என்று அறிந்தபோது சிலிர்த்தது.கொள்கை உரமூட்டி வளர்த்த அன்புத் தாயை இழந்து தவிக்கும் தம்பி தாயகம் கவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

 

Tags : V. K. Nagar Assembly ,Constituency ,Homeland ,Kavi Thayyar Choundhary Ammayar Abhivaioti ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,V. ,K. Nagar Assembly Constituency ,V. K. Nagar Assembly Constituency ,Th. M. Corporate ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...