×

டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

நத்தம், அக்.28: நத்தம் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்குச் செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை நோக்கி ஜெயக்கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Natham ,Krishnan ,Natham Kovil Patti ,Sherveedu ,Madurai National Highway ,Jayakrishnan… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...