திருச்சி, அக்.28: திருச்சி உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அக்.26ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டாக்கர்ஸ் ரோடு அருகே போதை மாத்திரை விற்ற தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 40 போதை மாத்திரை, ஊசி பறிமுதல் ெசய்யப்பட்டன.
