கொழும்பு: இன்டெக்ரிட்டி ஸ்டார் என்ற வணிகக் கப்பல், இலங்கைக்கு தெற்கே 100 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளாகி நடுக்கடலில் நின்றது. இதனால் கப்பலில் தவித்த 9 இந்திய மாலுமிகள் உட்பட 14 பணியாளர்கள் அவசர எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து கப்பலில் தவித்த 14 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
