- ரஞ்சி கோப்பை கிரிக்கெட்
- நிஷால்
- லெம்டூர் நூற்றாண்டுகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெங்களூரு
- நாகாலாந்து
- தமிழ்
- தமிழ்நாடு
- விமல் குமார்
- பிரதோஷ் ரஞ்சன் பால்
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய தமிழ்நாடு அணியின், விமல் குமார் 189, பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன் குவித்ததால், தமிழ்நாடு 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதையடுத்து, முதல் இன்னிங்சை துவக்கிய நாகாலாந்து, நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழந்து 150 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 3ம் நாளில், முதல் இன்னிங்சை நாகாலாந்து தொடர்ந்தது. துவக்க வீரர் தேகா நிஷ்சலுடன் இணை சேர்ந்து ஆடிய யுகாந்தர் சிங் அற்புதமாக ஆடி 67 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின் இணை சேர்ந்த நிஷ்சல் – இம்லிவாடி லெம்தூர் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல், தமிழ்நாடு பந்து வீச்சாளர்கள் திணறினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நாகாலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்து பதிலடி தந்தது. தேகா நிஷ்சல் 161, லெம்தூர் 115 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். நாகாலாந்து 147 ரன்கள் பின்தங்கிய நிலையில், கடைசி மற்றும் 4ம் நாளான இன்று நிஷ்சல் – லெம்தூர் இணை ஆட்டத்தை தொடர உள்ளது.
