×

திருப்பூர் மாநகரில் நடப்பாண்டில் 20 கொலை, 46 குண்டாஸ் வழக்குகள் பதிவு

திருப்பூர், டிச. 31: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரில் 2020ம் ஆண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அதன்படி மாநகரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விபரம்: 20 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 20 வழக்குகளுக்கும் குற்றவாளிகளை கைது செய்து அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் விசாராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2 கூட்டுக்கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே 20 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அதே போல  வீடுகளில் புகுந்து திருடியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 35 வழக்குகளுக்கு குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்கள் மீட்கப்பட்டது. மொத்தமாக களவு போன சொத்தின் மதிப்பு ரூ. 1.43 கோடியாகும். அதில் முனைப்புடன் போலீசார் செயல்பட்டு ரூ. 1.18 கோடி செத்துகளை மீட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீகிதம் திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளது. மாநகரில் 46 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 34 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டு குற்றவாளிகள் சிறையிலடைக்கப்பட்டனர். 114 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 கிலோ கஞ்சாவும், அதற்கு பயன்படுத்திய இரண்டு, நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு 130 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல மாநகரப்பகுதியில் மோட்டார் வாகன் சட்ட பிரிவின் கீழ் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக 6925 வழக்குகள் பதியப்பட்டு 5243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதற்கு அபராத தொகையாக ரூ. 4.87 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் புத்தாண்டையொட்டி 10 சோதனைச்சாவடிகளிலும் சிறப்பு வாகன தனிக்கை செய்யப்பட உள்ளது. அதே போல 9 நான்கு சக்கர ரோந்து வாகங்களும், 23 இரண்டு சக்கர ரோந்து வாகங்களும் நியமிக்கப்பட்டு முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே போல மாவட்ட போலீஸ் எஸ்பி. திஷாமிட்டல் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயத்த கொலை, 3 கூட்டுக்கொள்ளை, 27 வழிப்பறி, 45 கன்னங்களவு, 91 திருட்டு, ஆகிய குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 189 வழக்குகளில் 160 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 85 சதவிகிதம் ஆகும். மேலும், ரூ.2.60 கோடி மதிப்புடைய சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளது. அதில் போலீஸ் விரைவு நடவடிக்கையின் மூலம் ரூ.1.99 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Tirupur ,murders ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...