×

தமிழ்நாட்டில் நெல் ஈரப்பதம் குறித்து 3-வது நாளாக ஆய்வுசெய்த ஒன்றியக் குழு: ஈரப்பதத்தை 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள கந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் நெல்லை ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் கேட்ட போது தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நனைந்த நெல்மணிகள் காயவைக்க இடம் இல்லை. அதனால் நெல் கொள்முதல் செய்ய மறுக்கப்பட்டது.

அதனால் மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்தி விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது தான் தாங்கள் போட்ட முதலீடு எங்களுக்கு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொள்முதல் செய்யக்கூடிய நெல்லை ஆய்வுக்கு உட்படுத்தி உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக ஒன்றிய குழுவினர் விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

Tags : Union ,Tamil Nadu ,Mayiladuthurai ,Kutthalam ,Mayiladuthurai district ,Kandamangalam village ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்