சென்னை: மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முறிந்து விழும் மரங்களை அகற்ற 457 அறுவை இயந்திரங்கள் தயார். 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் பராமரிக்கப்பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
