சென்னை: சென்னை வியாசர்பாடியில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே உள்ள மழைநீர் கால்வாயில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பருவமழை தொடங்கிய நிலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.
