பெண் தற்கொலை

ஈரோடு, டிச.31: கோபி பச்சமலை சண்முகா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). டெய்லர். இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். சசிகலா கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருப்பை அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை. இந்நிலையில், சசிகலா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>