- டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனை
- லயோலா கல்லூரி
- கண் பராமரிப்பு நிபுணர்கள் மாநாடு
- சென்னை
- டாக்டர். அகர்வாலின் ஆப்டோமெட்ரி நிறுவனம்
- டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம்
சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி மற்றும் லயோலா கல்லூரி சார்பில் கண் பராமரிப்பு நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. சுகாதார பராமரிப்பையும், தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவான டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி, சென்னையைச் சேர்ந்த லயோலா ஐகாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஒத்துழைப்போடு தனி பராமரிப்பில் நுண்ணறிவு சாதனங்கள் மற்றும் பார்வைத்திறன் தொழில்நுட்பம் (Intelligent Systems and Vision Technology in Eye Care) என்ற தலைப்பு மீதான சர்வதேச கருத்தரங்கை (ISVTEC 2025) மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்வின் தலைமை விருந்தினர்களாக ஆர்த்தா சிஸ்டம்ஸ் எல்எல்சி யின் மேம்பாடு துறைக்கான இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் விஷ்வாக் அவனான், தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர். சுஜாதா மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ வாரியத்தின் தலைவர் டாக்டர். சௌந்தரி உள்ளிட்ட மருத்துவர்கள் விழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பான 100 அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மெய்நிகர் முறையில் (ஆன்லைன்) இதில் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் நோயறிதல் மற்றும் சிகிச்சை திட்டமிடலில் செயற்கை நுண்ணறிவு, எளிதாக எடுத்துச்செல்லத்தக்க ஒசிடி கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விழித்திரை இமேஜிங் செயல்பாடு, பார்வைத்திறனுக்கான சிகிச்சை மற்றும் நோயறிதலில் தோற்ற மெய்ம்மை (வெர்ச்சுவல் ரியாலிட்டி) உயிரியல் திசு அளவீட்டிற்கு மேட் லேப் செயலிகள் ஆகியவை குறித்து பயிலரங்குகள் நடைபெற்றது.
இந்தியாவில் தற்போது 4.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையின்மையாலும், 70 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளுள் பெரும்பாலானவை, நிகழாமல் தடுக்கப்படக்கூடியவையே. மேம்பட்ட பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பார்வை அளவியல் பராமரிப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம், “அனைவருக்குமான கண் ஆரோக்கியம்” என்ற இந்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ இலக்குகளை அடைய சிறந்த பங்களிப்பை வழங்குவதுடாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி நோக்கமாக செயல்பட்டு வருகிறது.
