×

இரைதேடி அலைமோதிய கொக்குகள் பாரில் தகராறு: ரவுடி கைது

திருச்சி, அக். 26: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை கம்பி கேட் அருகிலுள்ள டாஸ்மாக் பாரில், அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(38), பிரபல ரவுடியான இவர் கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஆனந்த் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனை உறையூர் சோமு பிள்ளை தெருவைச் சேர்ந்த புகழ்(26) என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், ஆனந்த் இருவரும் புகழை தாக்கினர். இதுகுறித்து புகாரின் போில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து ரவுடி சிவக்குமாரை கைது செய்தனர். அவருடன் தகராறில் ஈடுபட்ட ஆனந்தை தேடி வருகின்றனர்.

Tags : Iraithedi Alaymodhiya Kokkukal Bar ,Trichy ,Sivakumar ,Arjunan Nagar Mariamman Kovil ,Anand ,Keezhgalkandar Kottai ,TASMAC Bar ,Kambi Gate ,Melagalkandarkottai, Trichy ,
× RELATED சோமரசம்பேட்டையில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரை